உள்ளூர் செய்திகள்

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை

Published On 2022-10-05 15:23 IST   |   Update On 2022-10-05 15:23:00 IST
  • திருச்சி மேல கல்கண்டார்கோட்டை நாகம்மை தெருவை சேர்ந்தவர் ஆல்வின் ஜெரால்டு. இவரது மனைவி யாழினி விண்ணரசி (வயது 28).
  • கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.

திருச்சி

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை நாகம்மை தெருவை சேர்ந்தவர் ஆல்வின் ஜெரால்டு. இவரது மனைவி யாழினி விண்ணரசி (வயது 28). திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையே இருவருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் ஆல்வின் மனைவியிடம் வரதட்சணையாக கார் மற்றும் பணம் கேட்டதாக தெரிகிறது.

சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனம் உடைந்த யாழினி விண்ணரசி வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகுவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ள ரமேஷ் - எலீஸ் தினா ஆகியோரின் மகள் சின்ரிகா (வயது22). இவர் பிபிஏ பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்த எலி விஷத்தை தின்று தின்று மயங்கி விழுந்து உள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News