உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு
ஊட்டி தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
இதில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார். அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது.