உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் 15-ந் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் பழங்குடியினர் நடன நிகழ்ச்சி- கலெக்டர் அம்ரித் தகவல்

Published On 2023-08-08 14:38 IST   |   Update On 2023-08-08 14:38:00 IST
  • சுதந்திர தின விழா ஆகஸ்டு 15 அன்று ஊட்டி அரசுக் கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
  • 108 அவசர கால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15 அன்று ஊட்டி அரசுக் கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் காவல்துறையினர் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள விளையாட்டு மைதானத்தில் அணி வகுப்பு நடத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், பொதுப்பணித்துறையினர் சார்பில் மேடை அலங்காரப் பணிகள் மேற்கொள்ளவும், தீயணைப்பு துறையினர் மைதானத்தில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனத்தை நிறுத்தவும், தோட்டக்கலையின் மூலம் விழா மேடையில் பூந்தொட்டிகள் அலங்காரம் அமைக்கவும், நகராட்சித்துறையின் சார்பில் விழா நடைபெறும் இடத்தில் சுத்தம் செய்தல், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 108 அவசர கால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்தவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நடன நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

எனவே, அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன்(வளர்ச்சி), கண்ணன்(கணக்குகள்), தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), பூஷண குமார் (குன்னூர்), முகம்மது குது ரதுல்லா(கூடலூர்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ஷோபனா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News