உள்ளூர் செய்திகள்

குன்னூரில் முப்படை அணிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டிகள்

Published On 2022-11-21 14:26 IST   |   Update On 2022-11-21 14:26:00 IST
  • நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் குன்னூா் வெலிங்டன் தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது.
  • இந்த கிராஸ் கன்டரி போட்டியில் 10 கிலோ மீட்டா் போட்டியில் 24 ஓட்டப் பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா்

ஊட்டி,

மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் சாா்பில் ஆண்டுதோறும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கான இன்டா்கிராஸ் கன்ட்ரி போட்டிகள் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் குன்னூா் வெலிங்டன் தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கிராஸ் கன்டரி போட்டியில் 10 கிலோ மீட்டா் போட்டியில் 24 ஓட்டப் பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா். மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். புள்ளிகளின் அடிப்படையில் ஆா்மி ரெட் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இவா்களை மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டா் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் பாராட்டினாா்.

Tags:    

Similar News