உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி.

திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும்விழா

Published On 2022-06-09 11:33 GMT   |   Update On 2022-06-09 11:33 GMT
  • திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.
  • முதல் கட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஏர்வாடி:

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, மருதம், பூவரசு போன்ற பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் இசக்கிதாய், துணைத்தலைவர் மோலி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறுங்குடி பேரூராட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது முதல் கட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு பகுதிகளில் அடுத்த கட்டமாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. என பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் கூறினார்.

Tags:    

Similar News