உள்ளூர் செய்திகள்

மின்கம்பத்தில் வளர்ந்துள்ள மரத்தை அகற்ற வேண்டும்

Published On 2023-08-12 10:02 GMT   |   Update On 2023-08-12 10:02 GMT
  • பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
  • சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. 30 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் அடியில் இருந்து 6 உயரத்திற்கு சிறிய அளவிலான மற்றொரு இரும்பு கம்பம் நடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரிசையாக நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒன்றில் பெரிய மின் கம்பத்துக்கும் அதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

இந்த மின்கம்பம் அமைந்துள்ள வயல் தற்போது தரிசாக காணப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விவசாய பணிகள் தொடங்கிவிடும். அப்போது இதில் வளர்ந்துள்ள மரம் மேலே உள்ள மின்சாரக் கம்பியை தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மின்சார வயர்களின் வழியாக செல்லும் கிராமங்களில் மின்தடைஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே பூதராய நல்லூர் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் உள்ள மின்சாரக் கம்பத்தில் வளர்ந்துள்ள மரத்தை அகற்றி சீரான மின்விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் மின் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளவும் வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News