உள்ளூர் செய்திகள்

மாதானம் அரசு பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 2 பேர் பணியிடை மாற்றம்- கலெக்டர் உத்தரவு

Published On 2023-01-28 09:56 GMT   |   Update On 2023-01-28 09:56 GMT
  • மாலை 6 மணியை கடந்தும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் இருந்தது.
  • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.

ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவாகியும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் பறந்தவாறு இருந்தது.

தேசிய கொடியை அவமதித்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்கல் பரவியது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரி விடுத்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாதானம் அரசு ஆதிதிராவிடர்

நலத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர் பிரியதர்ஷினி உள்ளிட்ட இரண்டு பேரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News