உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே வீட்டு மாடி தோட்டம் அமைக்க பயிற்சி

Published On 2023-08-06 14:37 IST   |   Update On 2023-08-06 14:37:00 IST
  • திருமலையப்பபுரத்தில் மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
  • ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கமளித்தனர்.

கடையம்:

தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி, கடையம் வட்டாரம் 2023-24 கலைஞரின் திட்ட கிராமமான திருமலையப்ப புரத்தில் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் முன்னணி வீட்டு தோட்டம் செய்பவரான ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கமளித்தனர். மேலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் திட்ட விளக்கவுரை மற்றும் சிறப்புரையாற்றினார். பயிற்சியில் வட்டார தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பானுமதி, இசக்கியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News