உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி விளக்க கூட்டம்

Published On 2022-06-19 15:36 IST   |   Update On 2022-06-19 15:36:00 IST
விவசாயிகளுக்கு மண்பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் இலவச தெளிப்பு நீர் பாசன கருவி வழங்கும் திட்டம் குறித்து எடுத்து கூறப்பட்டது.

அரவேணு:

நெடுகுளா ஊராட்சி கப்பட்டியில் தோட்டகலை துறை மற்றும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி விளக்க கூட்டம் நடைபெற்றது. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை ஏற்று தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் விவசாயிகள் நலத் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் கோத்தகிரி துணை தோட்டக்கலை அலுவலர் ஜெயகுமார், உதவி தோட்டக்கலை அலுவலர் சவுமியா ஆத்மா திட்டம் அலுவலர் மணிமேகலை மற்றும் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சமுதாய வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணன், கிராம வளர்ச்சி அலுவலர் சுதாகரன் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு மண்பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் இலவச தெளிப்பு நீர் பாசன கருவி வழங்கும் திட்டம் குறித்து எடுத்து கூறினர். இப்பயிற்சியில் இதில் தோட்டக்கலை துறை அலுவலர் சந்திரன், முன்னோடி விவசாயி நடராஜ், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், விவசாய குழு மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News