மா மரங்களை கவாத்து செய்வது குறித்த பயிற்சி
- கவாத்து செய்தவன் மூலம் பூக்கள் உற்பத்தியை அதிகரித்து, காய் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது.
- தேவைக்கு அதிகமாக உள்ள கிளைகளை மா மரத்தில் இருந்து நீக்குவதன் மூலம் உரப்பகிர்வு முறையை திறனுடையதாக்க முடியும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மா மரங்களில் இருந்து ஆண்டுக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட காலநிலை மாற்றம், பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் காரணமாக மா பயிரில் மகசூல் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. எனவே, வரும் காலங்களில் நல்ல மகசூலை பெற்றிட விவசாயிகள் மா சாகு படியில் மா மரங்களில் அறுவடைக்கு பின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்து நல்ல மகசூல் பெற்று பயனடையலாம்.
அதன்படி, மா மரங்களில் கவாத்து செய்வதன் மூலம் நல்ல சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள இலைகளுக்கு கிடைத்து, மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து, நல்ல காய்ப்புக்கு ஏதுவாகிறது. தேவைக்கு அதிகமாக உள்ள கிளைகளை மா மரத்தில் இருந்து நீக்குவதன் மூலம் உரப்பகிர்வு முறையை திறனுடையதாக்க முடியும்.
மேலும் இலைவ ளர்ச்சியை கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் நிறைவான மகசூலை பெற முடியும். மரத்திற்கு எளிதாக சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் ஏற்பட கவாத்து வழி வகுப்பதன் மூலம் பூச்சி மற்றும் நோய்க ளால் ஏற்படும் இழப்பு குறைக்கப்பட்டு, காய்களில் நல்ல நிறம் உருவாகவும், தரம் மேம்படவும் வழிவகை செய்கிறது. கவாத்து செய்தவன் மூலம் பூக்கள் உற்பத்தியை அதிகரித்து, காய் உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது.
எனவே, இது தொடர்பாக தோட்டக் கலைத்துறை சார்பில் வட்டார வாரியாக பயிற்சி வழங்க பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம், எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் தோட்டக்கலை விஞ்ஞானிகள் மூலம் பயிற்சி மற்றும் செயல் முறை விளக்கம் வழங்கப்ப டவுள்ளது.
அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 4-ந் தேதி பர்கூர் வட்டாரத்திலும், 7-ந் தேதி மத்தூர் வட்டாரத்திலும், 8-ந் தேதி காவேரிப்பட்டணம் வட்டாரத்திலும், 12-ந் தேதி கிருஷ்ணகிரி வட்டாரத்திலும், 13-ந் தேதி வேப்பனஹள்ளி வட்டாரத்திலும், 14-ந் தேதி ஊத்தங்கரை வட்டாரத்திலும் பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் நடைபெறவுள்ளது. எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மா விவசாயிகள் நல்ல மகசூல் பெற்றிட தோட்டக் கலைத்துறை சார்பில் கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.