உள்ளூர் செய்திகள்

பயிற்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பாலக்கோட்டில் உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி

Published On 2023-07-27 15:14 IST   |   Update On 2023-07-27 15:14:00 IST
  • காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார்.
  • கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக வழங்க வேண்டும்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக பாலக்கோடு அறிவு கோவில் வளாகத்தில், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் தாலுகாவில் உள்ள நடமாடும் உணவு வணிகர்கள் மற்றும் சாலை ஓர துரித உணவகங்கள், பானிபூரி, பலகார கடை நடத்தும் உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.

பாலக்கோடு அனைத்து வணிகர் சங்க தலைவர் முத்து, பொருளாளர் மாணிக்கம் மற்றும் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார்.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா ஆகியோர் தலைமை தாங்கினார்.

உணவு பாதுகாப்பு துறை பயிற்சி பார்ட்னர் சக்சம் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி பயிற்சியாளர் தாரணி மூலம் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் லேபிள் குறித்தும், காண வேண்டிய அம்சங்களான உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள் அலர்ஜி காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை கண்டிப்பாக இருக்க வேண்டும். கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக வழங்க வேண்டும்.

அனைத்து உணவு வணிகர்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று முறையாக புதுப்பித்து நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க கேட்டுக்கொண்டார்.

பெரிய, சிறிய கடைகள் என்று இல்லாமல் அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வணிகர் சங்கம் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறினர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட உணவு வணிகர்கள் பங்கேற்றனர்.  

Tags:    

Similar News