பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு பயிற்சி
- மீன்கள் வளர்ப்பது குறித்த மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நடை பெற்றது.
- லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக மோளையானூர் விவசாயிகளுக்கு பண்ணை குட்டைகளில் கூட்டின மீன்கள் வளர்ப்பது குறித்த மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நடை பெற்றது.
இப் பயிற்சியை ஊராட்சி மன்ற தலைவர் துரை பாண்டியன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரம்மாள் ஆகியோர்தொடங்கி வைத்தனர்.
மேலும் பயிற்சியில் மீன்வளத் துறையின் சார்பாக ஆய்வாளர் ஜெய் ஸ்ரீ கலந்து கொண்டு பண்ணை குட்டைகள் அமைப்பதனால் ஏற்படும் நன்மைகள், பண்ணை குட்டைகளின் அளவு, மீன்களின் வகைப்பாடு, கூட்டின மீன்கள் வளர்ப்பதினால் ஏற்படும் பயன்கள் ஊட்டச்சத்து மேலாண்மை, நீர் மேலாண்மை, மீன் வளத்துறையில் உள்ள மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் பயிற்சியில் முன்னோடி மீன் வளர்ப்பாளர் சத்தியம் கலந்து கொண்டு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு முறைகள் அதன் பராமரிப்பு, அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் கலந்து கொண்டு உழவன் செயலி பயன்படுத்துவதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் அதனை பதிவிறக்கம் செய்வது குறித்தும் விளக்கமாக எடுத்து வைத்தார்,
பயிற்சியில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சண்முகம், மனோஜ் குமார் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.