உள்ளூர் செய்திகள்

 பலவன திம்மனப்பள்ளி இல்லம் தேடி கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்த போது எடுத்தபடம்.

இல்லம் தேடி கல்வியில் பணியாளர்களுக்கு பயிற்சி

Published On 2023-02-08 15:34 IST   |   Update On 2023-02-08 15:34:00 IST
  • இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் 500 ஆசிரியர்களுக்கும், 20 தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
  • மாணவர்களை கையாளுதல் பற்றியும், வருகையை தினசரி பதிவது குறித்தும் விளக்கினர்.

சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் 500 ஆசிரியர்களுக்கும், 20 தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

அதில் பலவனதிம்ம னபள்ளி நடுநிலை பள்ளியில் நடந்த பயிற்சிக்கு அப்பள்ளி தலைமை யாசிரியர் அதிஷ்டம் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் வைத்தி யநாதன் தொடங்கி வைத்து திட்டத்தின் நோக்கம், மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் குறித்து பேசினார்.

கருத்தாளர்களாக ஆசிரியர்கள் சரவணன், இமல்டா சங்கீதா, பரமே ஸ்வரி ஆகியோர் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் கற்பித்தல் பற்றியும், மாணவர்களை கையாளுதல் பற்றியும், வருகையை தினசரி பதிவது குறித்தும் விளக்கினர்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் தலைமையாசிரியர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News