உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு அருகே விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2023-02-24 09:42 GMT   |   Update On 2023-02-24 09:42 GMT
  • மண் பரிசோதனை செய்வதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
  • விவசாயிகள் பயன்படுத்தும் உர செலவு குறைகிறது, மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கமடைகின்றன.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்யும் முறை மற்றும் மண் பரிசோதனை செய்வதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

வேளாண்மையில் பஞ்சகாவியா, பத்திலை கரைசல், மீன் அமிலம் தயாரிக்கும் முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அங்கக வேளாண்மை செய்வதன் மூலம் விவசாயிகள் பயன்படுத்தும் உர செலவு குறைகிறது, மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கமடைகின்றன. இதனால் மண்வளம் பாதிக்கப்படுகின்றது என்று எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கால்நடை துறை மூலம் கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் மற்றும் மாடுகளுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம், விவசாயிகள் பட்டு வளர்ப்பின் மூலம் அதிக லாபம் பெறலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் மண் பரிசோதனை செய்யும் செயல் விளக்கத்தினை விவசாயிகளுக்கு செய்து காட்டினர். உழவர் பயிற்சி நிலையம் வேளாண் அலுவலர், கால்நடை மருத்துவர், இளநிலை ஆய்வாளர் பட்டு வளர்ச்சி துறை மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News