உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சிற்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி நடைபெற்ற காட்சி.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிற்பங்கள் குறித்த பயிற்சி வகுப்பு

Published On 2022-11-23 09:41 GMT   |   Update On 2022-11-23 09:41 GMT
  • உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சி யகத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்பங்களை அறிவோம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
  • பல்லவர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், சோழர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது

நெல்லை:

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சி யகத்தில் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிற்பங்களை அறிவோம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர்

சிவ.சத்திய வள்ளி கலந்து கொண்டு சிற்பங்களை பார்த்து அவை என்ன சிற்பங்கள் என்பது கண்டுபிடிப்பது தொடர்பான பயிற்சி வகுப்பினை மாணவ, மாணவிகளுக்கு நடத்தினார். மேலும் பல்லவர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், நாயக்கர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும், சோழர்கள் கால சிற்பங்களின் சிறப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நடுகற்கள், சதிக்கற்கள் பற்றியும் விரிவான விளக்கத்தினை அளித்தார். பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News