பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.
கடமலை மயிலை ஒன்றியத்தில் நாற்றாங்கால் பண்ணை அமைக்கும் பயிற்சி முகாம்
- முகாமில் நாற்றாங்கால் பண்ணை அமைப்பது மற்றும் அவற்றை பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
- மேலும் பஞ்சகவ்ய உரம் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் பண்ணை அமைத்தல் தொடர்பாக பயிற்சி முகாம் மயிலாடும்பாறை யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வருசநாடு வனச்சரகர் சந்திரசேகரன், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார மேலாளர் தங்கக்கொடி, வனவர் பென்ஸ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நாற்றாங்கால் பண்ணை அமைப்பது மற்றும் அவற்றை பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பஞ்சகவ்ய உரம் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேளாண்மைத்துறை உதவி அலுவலர்கள் சுருளிராஜ், புகழேந்தி, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் பவித்ரா ,விஜயரங்கன், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் கதிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.