உள்ளூர் செய்திகள்

பரமத்தியில் பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2023-02-21 07:56 GMT   |   Update On 2023-02-21 07:56 GMT
  • வட்டார வள மையத்திற்கு உட்பட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 7-ம் கட்ட பயிற்சி முகாம், அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.
  • இப்பயிற்சியினை பரமத்தி வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சுபா தொடங்கி வைத்தார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 7-ம் கட்ட பயிற்சி முகாம், பரமத்தி வட்டார வளமையம், பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, வில்லிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது.

இப்பயிற்சியினை பரமத்தி வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சுபா தொடங்கி வைத்தார். பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வ ராணி எடுத்துரைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் அனிதாகுமாரி, பார்வதி, ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் கணக்கு பாடத்தில் அடிப்படை திறன்களை கற்பிப்பதற்கான கற்பித்தல் உத்திகளை செயல்பாடுகள் மூலம் கற்றுக் கொண்ட னர். பயிற்சியின் கருத்தாளு னர்களாக பள்ளி ஆசிரி யர்கள் நிர்மலா, தர்மராஜன், ஷைலாபீபி, பிரபு, கோபி, ரகுபதி, ரதி, லோகேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர்.

இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் பார்த்தசாரதி செய்திருந்தார்.

Tags:    

Similar News