உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் பரிதாபம்: கட்டிடத்திற்கு சாரம் கட்டும்போது தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2022-11-14 12:35 IST   |   Update On 2022-11-14 12:35:00 IST
  • ராஜேந்திரன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
  • நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

விழுப்புரம்:

விழுப்புரம் சித்தேரிக்கரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது47)இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 9-ந் தேதி விழுப்புரம் விராட்டிக்குப்பம் வினோபா நகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் புதிய வீடு கட்டும் பணிக்காக 15 அடி உயரமுள்ள சாரம் கட்டி பூசுவேலைகளை பார்த்து வந்துள்ளார். 

அப்போது தவறுதலாக மேலிருந்து கிழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. உடனடியாக அருகிலிரு ந்தவர்களின் உதவியுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டிருந்தார். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News