உள்ளூர் செய்திகள்

வியாபாரி 20 கிலோ தங்கத்துடன் தலைமறைவு- நகைக்கடை உரிமையாளர்கள் கலக்கம்

Published On 2022-10-07 15:32 IST   |   Update On 2022-10-07 15:32:00 IST
  • வியாபாரி கடந்த 2-ந்தேதி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
  • கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த சில பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் வியாபாரியிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பதாக தெரிகிறது.

கன்னியாகுமரி:

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க தங்க நகை வியாபாரி ஒருவர் நகைக்கடைகளுக்கு தங்கம் மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் நெல்லை, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளுக்கு தங்கம் விற்பனை செய்து வந்தார். பல நகைக்கடைகளில் அவர், தங்கத்துக்காக முன் பணம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வியாபாரி கடந்த 2-ந்தேதி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நகைக்கடை உரிமையாளர்கள் அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த சில பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பதாக தெரிகிறது.

இதே நபர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் இதே போல பலரை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி பின்னர் 2 வருடம் கழித்து வந்து எல்லோரிடமும் ஏதோ ஒரு சிறு தொகையை கொடுத்து சமரசம் செய்து மீண்டும் வியாபாரத்தை தொடங்கியவர் என கூறப்படுகிறது.

இப்போது சுமார் 20 கிலோ தங்கத்துடன் தலைமறைவாகி விட்டார். இவர் தலைமறைவான தகவல் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News