உள்ளூர் செய்திகள்

மணப்பாடு கடற்கரையில் குவிந்த மக்கள்.


தொடர் விடுமுறையையொட்டி மணப்பாடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-10-25 07:06 GMT   |   Update On 2022-10-25 07:06 GMT
  • சுற்றுலா பயணிகளுக்காக கடலில் பிடித்த மீன்கள், நண்டு போன்றவற்றை சுட சுட பொறித்து விற்பனை செய்கின்றனர்.
  • கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் மணப்பாடு கடற்கரை வராமல் செல்வதில்லை.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்டது மணப்பாடு கடற்கரையில் தீபாவளி தொடர்விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு இங்கு வந்தனர்.

கடற்கரையையொட்டி இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று, குன்றின் மீதுஉள்ள திருச்சிலுவை நாதர் ஆலயம். ஆலயத்திற்குப் பின்புறம் உள்ள கலங்கரை விளக்கு, புனித சவேரியார் வாழ்ந்த குகை, தியான மண்டபம், நாழிக்கிணறுஆகியவற்றை பார்த்து ரசிப்பதும், மணல் குன்றின் மீதுஏறி விளையாடுவதும், பின்பு குடும்பத்துடன் கடலில் நீராடி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தனிநபர்கள் கடலில் பிடித்த பலவகையான மீன்கள், நண்டு.இறால் போன்றவற்றை சுட சுட என்னனயில் பொறித்து விற்பனைசெய்கின்றனர். மேலும் ஐஸ் கீரீம் கடைகள் உட்பட பல வகை தனியார் கடைகள் உள்ளது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பொருட்களை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக உவரி, கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் மணப்பாடு கடற்கரை வராமல் செல்வதில்லை. குளிர்ந்த காற்று சில்லென்று வீசிக்கொண்டு குற்றாலசாரல் போல மழை பெய்தாலும் தீபாவளி தொடர்விடுமுறையையொட்டி மணப்பாடுகடந்கரைக்கு கூட்டமாக மக்கள் வந்தனர்.

Tags:    

Similar News