உள்ளூர் செய்திகள்

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதை படத்தில் காணலாம்.

சாலையோர ஆக்கிரமிப்புகளால் சுற்றுலா பயணிகள் அவதி

Published On 2023-05-08 09:13 GMT   |   Update On 2023-05-08 09:13 GMT
  • இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக வாகன நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும்.
  • போதிய கழிவறை வசதி கூட இல்லாமல், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஒகேனக்கல்,

தருமபுரி மாவட்டம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக ஒகேனக்கல் இருந்து வருகிறது.

இங்கு தருமபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.

அதேபோல அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருகின்றனர்.

இந்நிலையில் ஒகேன க்கல்லில் பிரதான வீதிகளில், சாலையோர கடைகள் மற்றும் முக்கிய ஓட்டல் கடைக்காரர்கள், பாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர்.

மேலும் சாலையில் இருபுறங்களும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதையில் நடந்து செல்லவே வழி இல்லாத அளவிற்கு அதிக இடையூறாக உள்ளது.

மேலும் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ் வாகனமும் செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையை கவனத்தில் கொண்டு சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான பாதை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மேலும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக வாகன நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலையும், வாகன நெரிசலையும் சீர் செய்ய முடியும்.

தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்களின் வசதிக்காக எவ்வித அடிப்படை வசதி களையும் சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வில்லை. போதிய கழிவறை வசதி கூட இல்லாமல், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் பரிசல் இயக்குதல், மீன் சமையல் உள்ளிட்ட பகுதிகளில் முறையான கட்டணங்களை கடைப்பிடிப்பதில்லை உள்ளிட்ட ஏராளமான குற்ற ச்சாட்டுகளை சுற்றுலாப் பயணிகள் வைக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News