உள்ளூர் செய்திகள்

ரத சப்தமியை முன்னிட்டு அதக்க பாடி லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

சூரிய பிரபை வாகனத்தில் பெருமாள் உலா

Published On 2023-01-28 15:07 IST   |   Update On 2023-01-28 15:07:00 IST
  • பால், பன்னீர், இளநீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்கினர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அதகப்பாடி கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண சாமி திருக்கோவிலில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு அதி காலையில் மூலவர் லட்சுமி நாராயணருக்கு பால், பன்னீர், இளநீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சூரிய பிரபை வாகனத்தில் சீனிவாச பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு கோவில் கோபுரத்தின் முன்புறம் சூரிய உதயத்தின் போது வழிபாடு நடைபெற்றது.

சீனிவாச பெருமாள் முன்பு சூரியன் தோன்றியபோது பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் திருக்காட்சியை கண்டு பரவசமடைந்தனர். சீனிவாச பெருமாள் கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சீனிவாச பெருமாள் ரத சப்தமி நாளில் கோவிலில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அதகபாடி கிராம மக்கள். ஆன்மீக அன்பர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News