அ.தி.மு.க சார்பில் நாளை கிருஷ்ணகிரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-
- நாளை காலை 10 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
- துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அ.தி.மு.க கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரியில் நாளை நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராகிய எனது தலைமையில், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் முன்னிலையில் நாளை காலை 10 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன பேருரை ஆற்ற உள்ளார்.
அது சமயம் கழக இந்நாள், முன்னாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.