நாமக்கல்லில் நாளை கோடைகால மீன் வளர்ப்பு இலவச பயிற்சி
- நாளை காலை 10 மணிக்கு, கோடை கால மீன் வளர்ப்பில் பண்ணை மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
- நவீன தொழில்நுட்ப முறையில் மீன்வளர்ப்பு, மேலும் மாநில, மத்திய அரசுகளின் மீன் வளர்ப்புக்கான மானிய உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்ப டும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை 10 மணிக்கு, கோடை கால மீன் வளர்ப்பில் பண்ணை மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில், மீன் பண்ணைகளில் கோடைக் காலத்திற்கேற்ப தண்ணீர் பராமரிப்பு முறைகள், தாய் மீன் மற்றும் மீன் குஞ்சுகளுக்கு உணவு மேலாண்மை, தண்ணீரில் வெப்பநிலையை குறைப்பதற்கான ஆலோசனை, மீன் பிடித்த குளங்களை காயவிட்டு மேல் மண்ணை அகற்றி செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள், குறுகிய கால மீன் வளர்ப்பு முறைகள், இயற்கை உணவு உற்பத்தி முறைகள், நவீன தொழில்நுட்ப முறையில் மீன்வளர்ப்பு, மேலும் மாநில, மத்திய அரசுகளின் மீன் வளர்ப்புக்கான மானிய உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்ப டும்.
இப்பயிற்சி கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் பயிற்சிக்கு வருபவர்கள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.