உள்ளூர் செய்திகள்
கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் 100 ரூபாயை தொட்டது தக்காளி விலை
- பருவமழை மற்றும் வரத்து குறைவால் விலை ஏற்றம்
- சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலையிலும் ஏற்றம்
தக்காளி விலை ஏறிக்கொண்டே இருந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் கோயம்போடு மொத்த விற்பனை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 10 ரூபாய் அளவில் குறைந்தது. இதனால் சில்லறை விலையில் 120 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை காய்கறி சந்தையில் விலை அதிகரித்து மீண்டும் 100 ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால் சில்லறை விலையில் 120-க்கும் மேல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று கோயம்பேட்டில் சாம்பார் வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 130 ரூபாயாக அதிகரித்துள்ளது. சந்தைக்கு காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.