உள்ளூர் செய்திகள்

பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த இடமே புகைமண்டலமாக காட்சி அளித்தது. 

கள்ளக்குறிச்சியில் இன்று பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்துரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2023-02-12 15:08 IST   |   Update On 2023-02-12 15:08:00 IST
இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது

கள்ளக்குறிச்சி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 47) இவர் கள்ளக் குறிச்சி சுந்தர வினாயகர் கோவில் தெரு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து

இந்த பழைய இரும்பு கடையில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவல் அறிந்த கள்ளக் குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் மற்றும் தியாக துருகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பழைய இரும்பு கடையில் இருந்த பழைய இன்ஜின், ஆயில், டயர் உள்ளிட்ட பழைய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது.

ரூ. 5 லட்சம் சேதம்

இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News