உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
நத்தத்தில் புகையிலை விற்றவர் கைது
- புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு அரசு தடைவிதித்துள்ளது
- நத்தம் பகுதியில் புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை:
நத்தம் முஸ்லிம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் (35).
இவர் நத்தம் அவுட்டர் செந்துறை சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் டீக்கடையை சோதனை செய்தனர்.அப்போது 30 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து அலாவுதீனை போலீசார் கைது செய்தனர்.