உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த செங்கிப்பட்டி பகுதி மக்கள்.

இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும்; செங்கிப்பட்டி மக்கள் மனு

Published On 2023-01-23 08:30 GMT   |   Update On 2023-01-23 08:30 GMT
  • செங்கிப்பட்டியில் எங்களுக்கு சொந்தமாக குடிமனையோ, வீடுகளோ கிடையாது.
  • ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கி உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி சேர்ந்த பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் காமராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர்கள் தமிழ் செல்வி , தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா செங்கிப்பட்டியில் எங்களுக்கு சொந்தமாக குடிமனையோ, வீடும் கிடையாது.

ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கி உள்ளது. அதில் நீண்டகாலமாக குடியேறாமல் காலிமனை உள்ளது.

குடியேறாமல் இருக்கும் காலி குடிமனை பட்டாவை ரத்து செய்து புதிதாக குடியேறி இருக்கும் எங்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News