உள்ளூர் செய்திகள்

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2023-02-08 15:55 IST   |   Update On 2023-02-08 15:55:00 IST
  • 12-ம் வகுப்பு படித்து வந்தார்
  • போலீசார் விசாரணை

போளூர்:

கலசப்பாக்கம் அருகே உள்ள லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை மகன் செல்வா (வயது 18) செல்வா பக்கத்து கிராமத்தில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை 1 ½ வருடமாக காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள் கல்லாங்குத்து பாறைக்கு காதலியை வரவைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படவே, சிறுமியின் தாயார் உள்ளூர் நர்சு உதவியுடன் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சென்று பரிசோதனை செய்தனர்.

அங்கு டாக்டர் சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கவிதா சப் -இன்ஸ்பெக்டர் மீனாட்சி அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

இதையெடுத்து வாலிபர் செல்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து செல்வா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News