உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் துணை சபா நாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், டி.ஐ.ஜி. ஆனிவிஜயா.

திருவண்ணாமலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

Published On 2022-07-04 09:28 GMT   |   Update On 2022-07-04 09:28 GMT
  • முன்னேற்பாடுகள் தீவிரம்
  • அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 8 மற்றும் 9 தேதியில் வருகை தருவதை ஒட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் வருகின்ற 8 மற்றும் 9-ந் தேதிகளில் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். அன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் கருணாநிதி சிலை திறப்பு விழாகளில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது திருவண்ணாமலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

அப்போது கலெக்டர் முருகேஷ் வேலூர் வடக்கு மண்டல டி.ஐ.ஜி. ஆனி விஜயா,துணை சபாநாயகர் பிச்சாண்டி அண்ணாதுரை எம்பி, திமுக மருத்துவமனை மாநில துணைத்தலைவர் கம்பன் திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News