உள்ளூர் செய்திகள்
ெகங்கையம்மன் சிரசு ஊர்வலம்
கெங்கையம்மன் கோவிலில் வைகாசி உற்சவம்
- ஏழைகளுக்கு கூழ் வழங்கப்பட்டது
- சிறப்பு வழிபாடு நடத்தினர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் உள்ள சந்தவாசல் கெங்கையம்மன் கோவிலில் வைகாசி முதல் வெள்ளிக்கிழமையில் வசந்த உற்சவம் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.
இதைமுன்னிட்டு காலையில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.
பிற்பகலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கூழ் கொண்டு வந்து கோவில் முன்பு கொப்பரையில் ஊற்றி, பின்னர் சிறப்பு வழிபாடு நடத்தி ஏழைகளுக்கு கூழ் வழங்கப்பட்டது.
இரவில் அம்மன் திருவீதி மேளதாளம், வாண வேடிக்கையுடன் நடைபெற்றது.