திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுகவில் அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
50 ஆயிரம் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
- முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமையில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் நாராயணன், மாவட்ட பொருளாளர் நயனக்கண்ணு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, கலியபெருமாள், சரவணன், ராமச்சந்திரன், கோவிந்தராஜ், தொழிற்சங்க செயலாளர் பழனி, மாவட்ட பேரவை துணை செயலாளர் ரேடியோ ஆறுமுகம், மாணவரணி துணைத் தலைவர் உஷா நாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் தரணி, வழக்கறிஞர் பிரிவு சஞ்சீவி ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.