திருவண்ணாமலை கோவிலில் அண்ணாமலையாருக்கு திருக்கல்யாணம்
- பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாமலையார் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிதலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் போது உத்திர நட்சத்திரத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத விதமாக கருவறையில் இருக்கும் போக சக்தி அம்மனுக்கு சரியாக 12 மணி அளவில் திருமாங்கல்யம் தாழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மன் சன்னதியில் உண்ணாமலை அம்மனுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்ட நிலையில் இன்று மாலை அம்பாள் குமர கோயிலுக்கு சென்று அம்மனுக்கு பெண் அழைப்பு மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
அம்பாள் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த நிலையில் உற்சவமூர்த்தியான அண்ணாமலையார் மேளதாளத்துடன் சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு எழுந்தருளி சாமியும் அம்மனும் எதிரெதிரே காட்சியளித்து மாலை மாற்றும் நிகழ்வு மற்றும் பூ பந்து போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளியசாமி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலச பூஜை மாங்கல்ய பூஜை உபநயனம் ரக்ஷ பந்தனம் அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு மாங்கல்ய தாரணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார் அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தார்கள்.