உள்ளூர் செய்திகள்

போளூர் நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

Published On 2023-04-07 15:08 IST   |   Update On 2023-04-07 15:08:00 IST
  • சிறப்பு அபிஷேகம் நடந்தது
  • ஏராளமான பொதுமக்கள் தரிசனம்

போளூர்:

போளூரில் அமைந்துள்ள நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் 14-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து காலையில் மூலவர் ஸ்ரீ பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.

சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு வள்ளி தேவசேனா சமேதா ஸ்ரீ சுப்ரமணியர் கல்யாண கோலத்தில் ஊர் முழுவதும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் தீபாரதனை செய்து முருகனின் அருள் பெற்றனர்.

இதற்கு முன்னதாகவே போளூர் ஜெயம் குரூப் அன்னதான கமிட்டி மூலம் மதியம் 12 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜெயங்குருப்அன்னதான கமிட்டியின் தலைவர் பழனி, செயலாளர் ஜெகன், பொருளாளர் சக்திவேல், மற்றும் உறுப்பினர்கள் கணேசன், கோபிநாத், எஸ். ரமேஷ் பாண்டியன், சுரேஷ், தினகரன், பிரபாகரன் வேலு, யுவராஜ், கௌதம், பார்த்திபன், வெங்கடேசன், ரமேஷ், பழனி, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News