உள்ளூர் செய்திகள்

வருகிற 22, 29-ந் தேதிகளில் வாரச்சந்தை செயல்படாது

Published On 2023-01-13 13:57 IST   |   Update On 2023-01-13 13:57:00 IST
  • செய்யாறு நகராட்சி ஆணையர் தகவல்
  • பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

செய்யாறு:

செய்யாறு நகராட்சி ஆணையாளர் கி.ரகுராமன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

செய்யாறில் வழக்கமாக வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் புதியதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், தற்காலிகமாக வாரச்சந்தை திருவோத்தூர் வேதபுரி ஈஸ்வரர் கோவில் அருகே இயங்கி வருகிறது.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயங்கும் வார சந்தை முன்னதாக நாளை சனிக்கிழமை அன்று நடைபெறும் என்றும், மேலும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலில் 10 நாள் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதனால் வாரச்சந்தை ஜனவரி 22,29 ஆகிய இரு தினங்கள் வாரச்சந்தை செயல்படாது. இவ்வாறு அதில் தொரிவிக்க ப்பட்டுள்ளது.

Tags:    

Similar News