உள்ளூர் செய்திகள்

கல் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-07-11 14:34 IST   |   Update On 2022-07-11 14:34:00 IST
  • 2 பேர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அடுத்த மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான ஹாலோ பிரிக்ஸ் கல் உற்பத்தி செய்யும் நிறுவனம் நாயுடு மங்கலம் அருகே இயங்கி வருகிறது.

இங்கு, பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவநாராயணன் (மாஹி 50), (சுரேஷா 30), (தசரத் 18), (அகிலேஷ் 23), உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த, 8ம் தேதி, ஹாலோ பிரிக்ஸ் கற்களை, டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹாலோ பிரிக்ஸ் கற்கள், டிராக்டரில் இருந்து சரிந்து, தேவநாராயணன்மாஹி, சுரேஷா, தசரத், ஆகியோர் மீது விழுந்து படுகாயமடைந்தனர்.

3 பேரும் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தேவநாராயணன்மாஹி, கடந்த 8ந் தேதி மாலை உயிரிழந்தார்.

இது குறித்து, கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News