உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத உத்தமராய பெருமாள்.

உத்தமராய பெருமாள் கோவிலில் தை மகர உற்சவம்

Published On 2023-01-19 14:49 IST   |   Update On 2023-01-19 14:49:00 IST
  • சிறப்பு தீபாராதனை நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கண்ணமங்கலம்:

கணணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் மலைமீது அமைந்துள்ள ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலில் நேற்று தை மகர உற்சவம் நடந்தது.

இதைமுன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் செய்து மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து வருகைதந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இரவில் சாமி திருவீதி உலாவும், 10 மணி அளவில் நாடகமும் நடைபெற்றது.

வாகனங்களில் வந்தவர்களால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்களை வரவேற்க கோவில் மலையடிவாரத்தில் பிரமாண்ட அனுமன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை படவேடு கோவில் செயல் அலுவலர் சிவஞானம், ஆரணி தக்கார் முத்துசாமி, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News