உள்ளூர் செய்திகள்
வந்தவாசியில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்த காட்சி.
வந்தவாசியில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு
- முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
வந்தவாசி
வந்தவாசி ஸ்ரீ சத்புத்ரி நாயகி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் முதல் நாள் சஷ்டி விழாவில் தாரகா சுரனை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முருகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்க ப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ முருகப்பெருமான் எதிரில் இருந்த தாரகாசூரணை போரில் வென்று தலையை துண்டிக்கும் நிகழ்ச்சி நடந்தது .
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகரை தரிசித்து சென்றனர்.