- 475 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது
- எராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆகியவை சார்பில் நடந்த இந்த முகாமை வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தொடக்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி செயலர்கள், மக்கள் நல பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் மொத்தம் 475 பேருக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன.