உள்ளூர் செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-10-02 13:56 IST   |   Update On 2022-10-02 13:56:00 IST
  • ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
  • கர்ப்பிணிகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது

செங்கம்:

செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் மரு. பூங்குழலி வரவேற்று பேசினார். புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீரகம், வயிறு, காது, மூக்கு, தொண்டை, இதயம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு சிகிச்சைகளும், மருத்துவ ஆலோசனைகளும், இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமலை, சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News