உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ள காட்சி.

வந்தவாசி அருகே கடை, வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2022-06-06 09:33 GMT   |   Update On 2022-06-06 09:33 GMT
  • கடை மற்றும் வீடுகளில் பதுக்கினர்.
  • 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வந்தவாசி:

வந்தவாசி பகுதியில் கடை மற்றும் வீட்டிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் கடை மற்றும் வீடுகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தனர்.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடை மற்றும் வீட்டின் உரிமையாளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News