உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி.

வந்தவாசியில் ஏரியில் மீன் பிடிப்பதை தடுத்ததை கண்டித்து சாலை மறியல்

Published On 2022-06-13 15:26 IST   |   Update On 2022-06-13 15:26:00 IST
  • மீன் பிடிக்க உரிமை உள்ளதாக முழக்கங்களை எழுப்பினர்.
  • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வந்தவாசி:

வந்தவாசி அருகே ஏரியில் மீன் பிடிப்பதை ஒரு கிராமத்தினர் தடுத்ததை கண்டித்து மற்றொரு கிராமத்தினர் சாலை மறியல் செய்தனர்.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரினை மருதாடு மற்றும் கடைசிகுளம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஞாயிற்றுக்கிழமை காலை அந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடைசிகுளம் கிராமத்தினரை மீன் பிடிக்கக் கூடாது என்று தடுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாங்கள் மீன் பிடிப்பதை தடுத்ததைக் கண்டித்து கடைசிகுளம் கிராம மக்கள் அந்த கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மருதாடு ஏரியில் மீன் பிடிக்க தங்களுக்கும் உரிமை உள்ளதாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி வடக்கு போலீசார் சமரசம் செய்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News