உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்

Published On 2022-12-29 15:59 IST   |   Update On 2022-12-29 15:59:00 IST
  • போக்குவரத்து பாதிப்பு
  • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்

செங்கம்:

செங்கம் அடுத்த தோக்கவாடி ஹவுசிங் போர்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கரியமங்கலம் பகுதியில் இருந்து மின் இணைப்புகள் வழங்க ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிராமப் பகுதிகளில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்க ப்படுவதாகவும் அந்த சமயங்களில் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டிலும் மின்தடை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மின்தடை ஏற்பட்டால் பல மணி நேரம் கழித்து தான் மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதா கவும் கூறி நேற்று இரவு திடீரென அப்பகுதி மக்கள் செங்கம்- திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சா லையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் செங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. எனினும் இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் கைவிடப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News