நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்தது
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள பைங்கினர் கிராமம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மைதானத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநாய் கடி நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை தாங்கினாாார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் வி.பாபு, கால்நடை உதவி இயக்குனர் ராமன், கால்நடை மருத்துவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு வெறிநாய் கடி நோயைப் பற்றி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பாலகோபால், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், தினகரன், வழக்கறிஞர் சான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் நாய்களுக்கு வெறி நாய் கடி நோய் தடுப்பூசி போடப்பட்டது.