உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு சான்றிதைைழ சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தனியார் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-10-17 09:56 GMT   |   Update On 2022-10-17 10:13 GMT
  • இளைஞர்கள் திறன் திருவிழா நடந்தது
  • 534 பேர் தேர்வு செய்யப்பட்டனர்

புதுப்பாளையம்:

புதுப்பாளையம் ஒன்றியம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் செயல்படுத்தப்படும் வட்டாரங்களில் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் இளைஞர்கள் திறன் திருவிழா புதுப்பாளையம் இதய மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகின் உதவி திட்ட அலுவலர் ஜான்சன் வரவேற்ற கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

உடன் புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி சுந்தரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட இயக்க மேலாண்மை அகின் திட்ட இயக்குனர் அஸையித் கலைமான் பங்கேற்றனர்.

புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ரபியுல்லா இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் சரோஜாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் 534 மேற்பட்ட கலந்து கொண்டு பயிற்சிக்கு நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சியில் சேர்வதற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முகாமில் வில்லியம் சகாயம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News