உள்ளூர் செய்திகள்

சாைலயை சீரமைக்க கோரி பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம்

Published On 2022-12-26 15:36 IST   |   Update On 2022-12-26 15:36:00 IST
  • பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதாக குற்றச்சாட்டு
  • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே பாலானந்தல்-மங்கலம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நேற்று நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பாலானந்தல் கிராமத்தில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள், அனைவரும் மருத்துவமனை, பள்ளி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க, மங்கலம் செல்லும் சாலையை பயன் படுத்துகின்றனர். இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

குண்டும், குழியுமாக உள்ள சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால், வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும், இரவு நேரங்களில் நிலை தடுமாறிகீழே விழுந்து காயமடைவதாக வேதனையுடன் தெரிவிக் கின்றனர்.

இதேபோல், மங்கலம்-வெளுங்கனந்தல் இடையே உள்ள சாலைபடுமோசமாக உள்ளன. இதன் மொத்த தொலைவு 7 கி.மீ., ஆகும்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் முறையிட்டும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சேதமடைந் துள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மேலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் காகித கப்பல் விட்டு, தங்களது எதிர்ப்பை இளைஞர்கள் பதிவு செய்தனர்.

அப்போது அவர்கள், சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News