செப்டாங்குளம் மதுரா புதூர் கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத பாதாள சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
பாதாள சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்
- 3 கால யாகபூஜை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் செப்டாங்குளம், மதுரா புதூர், திருநீர்மலை குன்றின் மீது புதியதாக வள்ளி தேவசேனா சமேத பாதாள சுப்ரமணியசாமி, கோவில் புதிதாக கட்டி பஞ்சவர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைத்து.
5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 கலசம் வைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களை வைத்து. 3 காலையாக பூஜைகள் செய்தனர். பின்னர் புனித நீர் கலசங்களை மேளதாளம், பம்பை உடுக்கை அடித்து கோவிலை சுற்றி வந்து திருநீர்மலை குன்றின் மீது உள்ள பாதாள சுப்பிரமணியசாமி கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் புனித நீரை ஊற்றினார்கள்.
சூரிய பகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டு. பிறகு அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் வள்ளி, தேவசேனா பாதாள சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை 6 மணிக்கு பாதாள சுப்பிரமணியசாமி புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.