உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.

கண்ணமங்கலம் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வராததால் பயணிகள் அவதி

Published On 2023-04-30 12:15 IST   |   Update On 2023-04-30 12:15:00 IST
  • பஸ் சுங்க வரி வசூல் ஏலம் யாரும் எடுக்காத நிலையில், சுங்கவரி மட்டும் பேரூராட்சி நிர்வாகம் பணியாளர் மூலம் வசூல் செய்து வருகிறது
  • போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பஸ் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் எவ்வித வாகன நிறுத்துமிடம் இல்லை என்பதால் இங்கு வரும் பயணிகள், பொதுமக்கள் போக்குவரத்துத்துக்கு இடைஞ்சலாக அவரவர் விருப்பப்படி வாகனங்கள் நிறுத்திவிடுகின்றனர்.

இந்த பஸ் நிலையத்தில் வெளிப்புறம் உள்ள சிமெண்ட் தளத்தில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள்.

இந்த பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் அனைத்து பஸ்களுக்கும் சுங்க வரி வசூல் பேரூராட்சி பணியாளர் மூலம் செய்து வருகின்றனர்.

சுங்க வரி வசூல் செய்யும் பேரூராட்சி, இங்கு வரும் பயணிகள் உள்பட பொதுமக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகள் கூட பஸ் நிலையத்தில் இல்லை. அனைத்து பஸ்களும் வேலூர்- திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் நின்று செல்வதால், பயணிகள் வெயில் மழையில் காத்திருந்து பயணம் செய்கின்றனர்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்:-

பஸ்கள் நிலையத்தில் உள்ளே வந்து நின்று செல்ல போலீசார்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் பஸ் சுங்க வரி வசூல் ஏலம் யாரும் எடுக்காத நிலையில், சுங்கவரி மட்டும் பேரூராட்சி நிர்வாகம் பணியாளர் மூலம் வசூல் செய்து வருகிறது.

எனவே உரிய முறையில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பஸ்கள் பஸ் நிலையம் பகுதியில் உள்ளே வந்து நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News