உள்ளூர் செய்திகள்

புதுப்பாளையம் பேரூராட்சியில் பயணியர் நிழற்கூடம் திறப்பு

Published On 2023-01-23 15:06 IST   |   Update On 2023-01-23 15:07:00 IST
  • அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செங்கம்

செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடம் திறக்கும் விழா நடந்தது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு புதுப்பாளையம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன், புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி, மாவட்ட கவுன்சிலர் மனோகரன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபி நன்றி கூறினார்.

Tags:    

Similar News