உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2023-05-16 15:22 IST   |   Update On 2023-05-16 15:22:00 IST
  • கும்பாபிஷேகம் நடத்த உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் மனு
  • ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? என சோதனை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவில், வீரகோவில், ராமநாதீஸ்வரர் கோயில்களில் புதிய அறங்காவலர் குழுவினர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பாண்டுரங்கன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துசாமி, செயல் அலுவலர் சிவாஜி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், முன்னாள் தலைவர் கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள் விஜய் அமிர்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வீரகோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் தற்போது நிலவரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலை ஆய்வு செய்தனர்.

விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் மாவட்ட அறங்காவலர் குழு துணை தலைவர் பாண்டுரங்கன் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News